Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 07 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, தற்போது நிரந்தரமாக மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையால் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
“மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையால் மகப்பேற்றுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார்கள், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வவுனியா அல்லது பிரிதொரு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர். இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணித்தாய்மர்கள் சிலர் அம்பியூலன்ஸ் வண்டியிலேயே குழந்தைகளைப் பிரசவித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
“இந்த நிலையில், மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.
இந்தநிலையில், மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
“மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படாமலே இருக்கின்றார். அவரையும் நிரந்தரமாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என, அவர் மேலும் தெரிவித்தார்.
25 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago