2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

பெருவிழாவுக்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா – 2017, இன்று (25) மாலை 2 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள மன்னார் மாவட்ட பிராந்தி  ஊடகவியலாளர்களுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என, ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா – 2017, மன்னார் நகர மண்டபத்தில்,  இன்று (25) மாலை 2 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வுகளுக்கு விருந்தினர்களாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு மாவட்டச் செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மன்னார் மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .