Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னாரில் பெற்றோலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், மன்னார் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு முன்னால், நேற்று (06) காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் நின்றதுடன், எரிபொருள் நிரப்பும் பணியாளர்களுடன், வாகன உரிமையாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டமையையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
மன்னார் நகரில் மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் காணப்பட்டுள்ளபோதும், அவற்றில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள மாந்தை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மாத்திரம், எரிபொருட்கள் கையிருப்பில் இருந்துள்ளன.
எனினும், தம்மிடம் கையிருப்பில் உள்ள பெற்றோல், வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மோட்டார் சைக்கில், முச்சக்கர வண்டி, கார் போன்றவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் வழங்கப்பட்டு வருவதாக, மாந்தை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
45 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
1 hours ago