Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முன்னைய அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவர் சார்ந்த சில கும்பல்களும் இணைந்து, கிளிநொச்சி நகரப் பொதுச்சந்தையை நவீனமயப்படுத்தும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்குக் கங்கணம் கட்டி நிற்பதாக, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கான தனியான தீயணைப்புப் பிரிவை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
கிளிநொச்சி நகரத்தின் பொதுச்சந்தையை நவீன வசதிகொண்ட நவீன திட்டமிடலுக்கு அமைவாக மூன்று மாடிகொண்ட சந்தைககட்டடத் தொகுதியை சுமார் 765 மில்லியன் ரூபாய் செலவில் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகராம் கிடைத்துள்ளது.
ஆனால், 2020ஆம் ஆண்டிலே நல்லாட்சி கவிழ்ந்து விடும், நாங்களே ஆட்சிப்பீடம் ஏறப்போகின்றோம் என்று சொல்லிக்கொண்டு முன்னைய அரசாங்கத்தில் பங்காளியாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் சார்ந்த சில கும்பல்களும் நவீன சந்தைக்கட்டடத் தொகுதியை இல்லாது செய்வதற்கு கங்கணம் கட்டி நிற்பதை பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
8 minute ago
15 minute ago
17 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
17 minute ago
34 minute ago