Editorial / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நல்லிணக்க கால்நடைகளை வழங்குவதாகக் கூறி, தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்களிடம் இருந்து பண மோசடி செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் நிறுவனம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு, நல்லிணக்க பசு மாடுகளைப் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட பயனாளிகளிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் முற்பணமாகப் பெற்றுச் சென்றுள்ளது.
ஆனால், இதுவரை எந்தவொரு பயனாளிகளுக்கும் கால்நடைகள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பில், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
41 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
56 minute ago