Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேச செயலாளருக்கு எதிராக முசலி பிரதேசச் செயலகத்துக்கு முன்னால் நேற்று (21) காலை இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம், சிலாபத்துறை பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முசலி பிரதேசச் செயலகத்துக்கு முன்னால் மக்கள் நேற்று (21) காலை ஒன்று கூடுவதை அவதானித்த பொலிஸார் விரைந்து சென்று அங்கு ஒன்று கூடுபவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அழைத்து பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆர்ப்பட்டங்கள் செய்வதற்கு முன் சுமார் மூன்று நாள்களுக்கு முன்னதாக பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக எந்த அனுமதியையும் எவரும் பெறவில்லை. இதன் காரணமாகவே, குறித்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முடியும். எனவே, முறையான அனுமதியைப் பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு, பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் முசலி பிரதேசச் செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கிராம அலுவலகரின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
49 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
49 minute ago
59 minute ago
2 hours ago