Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது,
நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர். நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கைகளிலும் விலங்கு போடப்பட்டது.
பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் என்னை பிடித்துவைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.
பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பபட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.
பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.
பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.
பொலிஸார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. R
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago