Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், போதைப்பொருள்களை உடமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில், 25 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்றயதினம் (26) இரவு, வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 1 கிலோ 5 கிராம் கேரளா கஞ்சாவும், 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட பெண், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், இன்று (27) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
41 minute ago
4 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
24 Mar 2026