Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 30 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வட மாகாணத்திலேயே, அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வு, வவுனியா நகரசபையில் நேற்று (29) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
இன்றைய நல்லாட்சியில் தான் இலங்கையிலே, குறிப்பாக வட மாகாணத்தில், அதிகளவான போதைப்பொருள் பாவனைக் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எத்தனையோ அழிவுகளைத் தடுத்த இந்த அரசாங்கத்தால், போதைப்பொருள் பாவனையை மட்டும் தடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே, போதையற்ற மாகாணமாக, வட மாகாணத்தை மாற்றியமைக்க, அனைவரும் கைகோர்க்க வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .