2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மேச்சல் தரவைகள் அழிவு

George   / 2016 மே 23 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

பொன்னாலை  - வட்டுக்கோட்டை வீதியில் இரு மருங்கிலும் உள்ள நிலத்தில் மண்ணுடன் சேர்த்து புற்களையும் பெயர்த்துக் கொண்டுச் செல்வதால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அழிவடைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை மற்றும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் கீழுள்ள மேற்படி பிரதேசத்தில் இருந்து, காவலரண்களில் பதிப்பதற்காக இராணுவத்தினரும், தனியாரும் மண்ணை வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

மண்ணுடன் புற்களும் வெட்டப்பட்டு கொண்டுச் செல்லப்படுவதால் அங்கு புற்கள் மீண்டும் வரள முடியாத நிலை ஏற்படுவதுடன் கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் தரவைகளை உருவாக்கி கொடுக்கவேண்டிய அதிகாரிகள், மேய்ச்சல் தரவைகளில் புற்களை வெட்டிச் செல்ல எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும் என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, பொன்னாலை – வட்டுக்கோட்டை வீதியில் கற்கழிக் குளத்துக்கு அண்மையில் உள்ள பகுதிக்கு வந்த சிலர்,  மண்ணுடன் சேர்த்து புற்களையும் ஞாயிற்றுக்கிழமை (22)  கொண்டு சென்றனர்.

இது தொடர்பில் அவர்களிடம் கேட்டபோது, வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் அனுமதியுடன் மண்ணை கொண்டுச் செல்வதாக கூறினர்.

இவ்வாறானவர்களின் பொறுப்பற்றச் செயலால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் போகின்றமையால் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .