Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா பஸ் நிலையப் பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளதாக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பஸ் நிலையப் பகுதியில், நகரசபை கட்டடத் தொகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தும் நபருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
பஸ் நிலையப் பகுதியில், தனது பல்சர் ரக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, பின்னர் இரவு வந்து பார்த்த போது, தனது மோட்டர் சைக்கிள் காணாமல் போயிருந்ததாகவும் தனது மோட்டார் சைக்கிளின் இலக்கம் NP JI 4516 என்றும் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியா, வேப்பங்குளம் பகுதியிலும் வெள்ளிக்கிழமை இரவு வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள் இரண்டு இட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
35 minute ago
44 minute ago