2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் பேரணி

Niroshini   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று, இன்று (06) நடத்தப்பட்டது.

வவுனியா, பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட வவுனியா இளைஞர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கறுப்பு கொடிகளை ஏந்திவாறு, மன்னார் வீதி வழியாக வருகை தந்து, கடை வீதி வழியாக வவுனியா - கண்டி வீதியில் உணவு தவிர்ப்ப்பில் ஈடுபட்டுள்ள இடத்துக்குப் பயணித்தனர்.

அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்,  அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தீர்க்கமான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .