2025 ஜூலை 02, புதன்கிழமை

முதிரை மரத்துடன் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - அக்கராயன் 4ஆம் கட்டை பகுதியில் கிட்டத்தட்ட  ஐந்து  இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பாரஊர்தி ஒன்றுடன், வன பரிபாலன திணைக்களத்தினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை அதிகாலை 5.30 மணியளவில் பரிபாலன திணைக்கள வட்டார அதிகாரி என்.செல்வநாயகம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற பார ஊர்தியும் சந்தேகநபரான சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தில் தேங்காய்கள் ஏற்றி செல்வது போன்று   ஐந்து  இலட்சம்பெறுமதியான முதிரை மரங்கள் ஏற்றி செல்லப்பட்டதாக வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு, குறித்த நபரை இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .