2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மேய்ச்சல் தரவை அமைக்க இடையூறு

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைப்பதற்கான குழுமுயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும், பல்வேறு வகையான இடையூறுகள் காணப்படுகின்றன.” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

“கால்நடைவளர்ப்பு, எமது மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக காணப்படுகின்றபோதும், மேய்ச்சல் தரவைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. மேய்ச்சல் தரவைகளை ஒவ்வொரு பிரதேசத்திலும் அமைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சில தடைகள் காணப்படுகின்றன.

மேய்ச்சல் தரவைக்கென ஒதுக்கப்படுகின்ற இடங்கள்,  வனப்பாதுகாப்பு அல்லது வேறு திணைக்களங்களுக்குச் சொந்தமான பகுதிகளாக காணப்படுகின்றன.அவர்களிடம் அனுமதிப் பெறுவதில் சிக்கல் காணப்படுகின்றது. இதுதொடர்பில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .