2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முறையிட்டும் பயனில்லை

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“மன்னார், மாந்தை மேற்கின் தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி கடற்றொழிலாளர்கள், இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என, மீனவர்கள்  கவலைத் தெரிவிக்கின்றனர்.

கடலினையே நம்பி இரு கிராம மக்களும் உள்ள நிலையில், அத்துமீறி வரும் இந்திய றோலர்கள், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதன் காரணமாக, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம்  இல்லாமல் கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.

கடற்றொழிலாளர்களின் கூட்டங்களிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகம், மன்னார் மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் இந்திய றோலர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதிகாரிகள், இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக அத்துமீறல் தொடர்கிறது” என அவர்கள் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .