2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம்

George   / 2017 ஜனவரி 01 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதி பத்திரத்துக்கான விவரங்கள் கிளிநொச்சியில் கோரப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம்  பெற்றுக்கொடுப்பது தொடர்பாக, உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு விவரங்கள் அனுப்ப வேண்டியிருப்பதனால், வாகனங்களை உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய விவரங்களை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்திடம் வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

சாரதி அனுமதி பத்திரம் தேவையான மாற்றுத்திறனாளிகள், முதலில் தங்களுடைய விவரங்களை கிளிநொச்சி உதயநகர் முத்துமாரி அம்மன் வீதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .