Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 மே 01 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா தவிர்ந்த கரைதுரைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 127 கிராம அலுவலர்கள் பணியாற்ற வேண்;டிய நிலையில் 81 கிராம அலுவலர்;கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்' என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, 46 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கரைதுரைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவில் 31 கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன், 15 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
27 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 கிராம அலுவலர் பிரிவுகளில் கிராம அலுவலர்கள்; கடமையாற்றி வருவதுடன் ஒன்பது கிராம அலுவலர்; பிரிவுகளில் கிராம அலுவலர் பதவிகள் வெற்றிடமாக காணப்படுகின்றன.
19 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 12 கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் 07 கிராம கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
15 கிராம அலுவலர் பிரிவுகளைக்கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஏழு கிராம அலுவலர்கள் கடமையாற்றி வருவதுடன் எட்டுக் கிராம அலுவலர் பிரிவுகள் வெற்றிடமாக காணப்படுகின்றன.
20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 13 கிராம அலுவலர்கள் கடமையாற்றுவதுடன் ஏழு கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்;றன.
அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெற்றிடமாகவுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் உள்ள கிராம அலுவலர்களே பதில் கடமைகளில் தற்போது ஈடுபட்டு வருகின்;றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
1 hours ago