Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
“பொருத்தமற்ற காரணங்களை முன்வைப்பதை விடுத்து, மக்களின் வாழ்வியல் பிரதேசங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். அல்லாதவிடத்து பாரிய போராட்டங்களை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
தமது காணிகளை முழுமையாக விடுவிக்க வேண்டும் என கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக, செவ்வாய்க்கிழமையிலிருந்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் மக்களை, சி.சிவமோகன் எம்.பி, இன்று அதிகாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், “இராணுவம் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக, தமது காணிகளை விடுவிக்க வேண்டும். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் குடியிருந்துகொண்டு, காட்டுப் பகுதியில் மாதிரிக் கிராமம் அமைத்து, எங்களை தங்கவைத்துள்ளது. எமது பூர்வீக இடத்திலிருந்து இராணுவம் வெளியேறி, நாம் எமது மண்ணில் குடியேறும்வரை, எமது போராட்டம் தொடரும். நல்லாட்சி அரசாங்கம்கூட, எமக்குரிய நிலத்தினை விடுவிக்காமல் ஏமாற்றி வருகிறது” எனக் கூறினர்.
இதற்குப் பதிலளித்த சிவமோகன் எம்.பி, “மக்களின் வாழ்வியல் பிரதேசங்களை விட்டு, இராணுவம் உடன் வெளியேறுவது அவசியமாகிறது. முல்லை. மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமம், வட்டுவாகல் பிரதேசத்தின் கிழக்கு முள்ளிவாய்க்கால் கிராமம், புதுக்கடியிருப்பு மக்களின் வாழ்விடங்கள், கொக்குளாய் பிரதேச மக்களின் வாழ்விடங்கள், நாயாறு கிராம மக்களின் பிரதேசம் என பெருந்தொகையினரின் காணிகளை, தொடர்ந்தும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago
58 minute ago