Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூலை 05 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வடக்கு, கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுத்த அடையாள பணிப் புறக்கணிப்புக்கு வலுச்சேர்க்கும் முகாமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் நேற்று ஈடுபட்டனர்
இதனால், நேற்று காலை அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற பல நோயாளர்கள், சிகிச்சை பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கொழும்பை அண்மித்த புறநகர் பகுதியான மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே அரச மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் ஆகியோர் நேற்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இலவசக் கல்வித் திட்டத்தை தனியார் மயமாக்கும் ஆரம்பமாக மாலபே மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளதாக குற்றம்சாட்டும் அரச மருத்துவ அதிகாரிகளின் இந்த அடையாளப் பணிப்புறக்கணிப்பில் அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச பல்வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கமும் இணைந்துகொண்டுள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும், மருத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago