2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், பைஷல் இஸ்மாயில்

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (23) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.

 'நல்லாட்சி அரசே 25 வருட அவல வாழ்க்கைக்கு விடிவில்லையா, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்து, விரட்டியடிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் வாழ்வுக்கு விடிவு எப்போது' என்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.

இது குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

'கடந்த 1990ஆம் ஆண்டு ஓக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டனர்.  இன்றுடன் கால் நூற்றாண்டு கடந்துள்ள நிலைமையில், அம்மக்களின் மீள்குடியேற்றம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. அதனை இந்த நல்லாட்சி அரசாங்கம்; மீள்குடியேற்றத்தினை உடனடியாக துரிதப்படுத்தவேண்டும் எனக் கோரியே இந்த கவனஈர்ப்பு நடவடிக்கையில் அட்டாளைச்சேனை மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்காக இன்று நாடு பூராகவும் முஸ்லிம் மக்கள் பாரிய கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஓர் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அம்மக்களின் பக்கம் கவனத்தை செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவேண்டும். எமது முஸ்லிம் சகோதரர்கள் இவ்வாறு அகதிகளாக இருப்பதை எம்மால் இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது' என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இக்கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எல்.யாசிர் ஐமன ,பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .