2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முழு நீரும் வெளியேறும் அபாயம்

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாகவும், குளம் உயரமாகவும் இருப்பதனால் துருசு திறக்கப்படுகின்ற போது, முழுநீரும் வெளியேறு அபாயம் இருப்பதனால், குளத்தில் மணல் மற்றும் மண் படிமங்களை அகற்றி மூன்று  அடியாக ஆழப்படுத்துமாறு  இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி குளம் இரணைமடு நீரை உள்வாங்கி வெளியனுப்பும் குளமாகவும், கனகாம்பிகைகுளததின் வான் நீரையும், ஏனைய பிரதேசத்து மழை நீரையும் உள்ளீர்த்து வெளியனுப்பும் குளமாகவும் காணப்படுகிறது.

“கூடுதல் காலத்துக்கு நீரை பெறும் குளமாக இருக்கிறது இருந்தும் குளத்தின் துருசினை திறந்து விட்டால் முழு நீரும் வெளியேறிவிடும்.  காரணம் குளம் மண் நிரம்பி திட்டாக உள்ளது. இதனால், நகர் மற்றும் புறநகர் பகுதி கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைகிறது எனவே குளத்தினை துருசு மட்டத்திலிருந்து மூன்று அடிக்கு ஆழப்படுத்தி தருமாறு கோருகின்றோம்” என, கமக்கார அமைப்புகளின் சம்மேளனம்  கோரிக்கை  நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தினை வினவியபோது, “குறித்த கோரிக்கை கிடைக்கப்பெற்றதாகவும், நீண்ட காலமாக குளம் சீர் செய்யப்படாமையினால் மணல் மற்றும் மண் படிந்து துருசு மட்டத்தை விட உயர்ந்து காணப்படுகிறது.

எனவே, குளம் ஆழப்படுத்த வேண்டிய பணி கட்டாயம் செய்யவேண்டியது. அதனை எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டும் அதற்கான நீதியிட்டங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்”  எனத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .