Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்,எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்
மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலக பிரிவுக்குள் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை வடக்கு முதல்வர் ஆரம்பித்துவைத்தார்.
மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள மக்களின் குறை நிவர்த்தி செய்யும் நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாலம்பிட்டி தட்சணா மருதமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவையினை வடக்கு மாகாண சபையும் மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்துவது குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வினை வடக்கு மாகாண முதல்வர் உயர் திரு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிவமோகன், வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடக்கு பிரதம செயலாளர் திரு.எஸ்.பத்திநாதன், மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்கினர்.
முதலமைச்சரின் அமைச்சு செயலகம், மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலகம், சுகாதார அமைச்சின் செயலகம் மற்றும் மருந்தகமும், விவசாய அமைச்சின் செயலகம் மற்றும் கண்காட்சி, கல்வி அமைச்சின் செயலகம், பிரதம செயலாளர் செயலகம், மடு பிரதேச செயலக சேவைகள், தேசிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரம், கமநல சேவைகள், தொழில் திணைக்கள சேவைகள், கிராம அபிவிருத்தி திணைக்கள சேவைகள், நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையின் சேவைகள், பிராந்திய நீரியல் இன விரிவாக்கல் நிலைய சேவைகள் (நன்னீர் மீன் வளர்ப்பு), திருமண பதிவுகள், கடவுச் சீட்டு, சமுர்த்தி சேவைகள், காவல்துறை சேவைகள், அஞ்சல் திணைக்கள சேவைகள், இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள் ஆகியன வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago