2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மடு தளத்துக்கான பாதயாத்திரை ஆரம்பம்

Niroshini   / 2021 ஜூலை 28 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா தேவாலயத்தில் இருந்து ஒரு தொகுதி யாத்திரிகர்கள், நேற்று (27) அதிகாலை  3:00 மணிக்கு  மடுவுக்கு பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து வருடாந்தம் மடு திருத்தலத்தின் பாதயாத்திரையில் கலந்துகொள்ளும் பக்தர்கள், ஜுலை மாதம்  02ம் திகதி  நடைபெறும் உற்சவத்தில் கலந்துகொண்டு வந்தனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஜுலை மாதத்தில் நடைபெற்ற  உற்சவத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (27) அதிகாலை  3:00 மணிக்கு வடமராட்சி கிழக்கு கப்பலேந்தி மாதா தேவாலயத்தில் இருந்து ஒரு தொகுதி யாத்திரிகர்கள்  மடுவுக்குப் புறப்பட்டுள்ளனர்.

இவர்கள்  ஏ9 வீதி வழியாக  முறிகண்டியில் இருந்து கொக்காவில்  வீதி  வழியாக ஐயன்கன்குளம் வரை சென்று, அங்கு இரவு  தங்கியிருந்தனர்.

இதையடுத்து, இன்று (28)  காலை. இவர்கள்   அங்கிருந்து மல்லாவி வழியாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்தனர். நாளை (29) புனித மடு  திருத்தலத்தை சென்றடையவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X