Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
யாழ்ப்பாணம் - மண்டைதீவில், கடற்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், மண்டைதீவு கிழக்குப் பகுதியில், 29 தனி நபர்களுக்குச் சொந்தமான சுமார் 18 ஏக்கர் காணியை, கடற்படையினர் நீண்டகாலமாகக் கையகப்படுத்தி வைத்துள்ளதாகவும் இந்நிலையில், தற்போது காணி அமைச்சின் 1964ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கக் காணி எடுத்தல் திருத்தச் சட்டத்தின் கீழ், கடற்படையின் “வெலுசுமன” எனும் பிரதான முகாமை அமைப்பதற்காக, குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட 29 பேரும், இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இக்காணிகளை விடுவித்து, அந்த மக்கள் தமது சொந்த மண்ணில் மீளக்குடியேற உதவிபுரியுமாறு, தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்வதாக, அந்தக் கடிதத்தினூடாக, மேலும் கோரப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago