2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னார் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை மன்னார் நீதவான் ஜீ.அலெக்ராஜா முன்னிலையில், நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.

இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து சட்டத்தரணிகள் தமது நீதிமன்ற செயற்பாடுகளை நிறுத்தி இருந்தனர்.

இதனால் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் ஜீ.அலெக்ராஜா ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .