2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னார் பொது வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு

Sudharshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொது வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவசர சிசிச்சைகளுக்கு நோயாளர்களை வேறு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்வதில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் ஏற்கனவே 5 அம்பியூலன்ஸ் வண்டிகள் காணப்பட்டது. அதில் ஒன்று விபத்துக்கள்ளாகி சேதமடைந்து பவனைக்கு உற்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகள் திருத்த வேலையில் உள்ளன. ஏனைய இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளை மாத்திரமே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் குறித்த இரு அம்பியூலன்ஸ் வண்டிகளை பயன்படுத்தி அவசர சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் மன்னார் வைத்தியசாலை தரப்பினர் உள்ளனர். இது மட்டுமின்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகளாக 06 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் 04 பேர் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் சாரதிகளுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மன்னார் பொது வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

குறிப்பாக மன்னார்   பொது வைத்தியசாலை பணிப்பாளரின் கடமைக்கு உயர் அதிகாரிகள் சிலர் தடையாக செயற்பட்டு வருகின்றமையினால்,வைத்தியசாலையில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டி பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மன்னார்  பொது வைத்தியசாலை பணிப்பாளர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக  வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .