2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மனைவியின் சகோதரர்களின் தாக்குதலில் நபர் படுகாயம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை மனைவியின் சகோதரர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த நபர், ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த கே.சசி (வயது 29) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

காணிப் பிணக்குக் காரணமாக மனைவியின் 4 சகோதரர்களும் இவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் இவர் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .