Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசி 69.5 சதவீதத்தினர் மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், சுமார் 5,626 பேர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் உள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (25) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், தற்போது வரை 59 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது ஊசி வழங்கப்பட்டுள்ளதாகவும் 2ஆவது தடுப்பூசி 49 ஆயிரத்து 844 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்
இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாரம் முதல், அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்தார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 5 ஆயிரத்து 626 பேர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் உள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகத் நெரிவித்ண அவர், இவர்களில் 1,400 பேருடைய விவரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
அத்துடன், "கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றவர்கள் தற்போது வீடுகளில் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு வைக்கப்படுகின்றவர்கள், ஓய்வு நிலையில் இருக்க வேண்டும் என்பதோடு, நீர் ஆகாரங்களை உற்கொள்ள வேண்டும். ஏதாவது உடலில் பிரச்சினைகள் ஏற்பட்டால், உரிய சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்" என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .