Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 பெப்ரவரி 09 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக” மன்னார் மாவட்ட செயலரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது. தேர்தல் கடமைக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 94 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
47 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 47 நிலைய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை மன்னார் மாவட்டத்தில் சுமார் 86 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
1000 அரச உத்தியோகத்தர்களும், பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .