Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் ஹறிற்ராஸ் வாழ்வுதயத்தின் உதவிக்கரம் பிரிவின் மாபெரும் இரத்ததான முகாம், 7ஆவது தடவையாக இன்று (23), வாழ்வதய மண்டபத்தில், ஹரிற்ராஸ் வாழ்வுதயத்தின் இயக்குநர் அருட்பணி செ.அன்டன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இந்த இரத்ததான நிகழ்வை, இயக்குநர் செ.அன்டன் அடிகளார் காலை 9 மணியளவில் ஆரம்பித்து வைத்தார். மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் எனப் பலர் இவ் இரத்ததான முகாமுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்த இரத்ததான முகாமில் மன்னார் மறைமாவட்டத்தைச் சார்ந்த குருக்கள் அருட்சகோதரிகள் போன்றோரும் அரச அரச சார்பற்ற துறைசார் அலுவலர்கள், தன்னார்வம் கொண்ட மக்கள், மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள், ஹறிற்ராஸ் வாழ்வுதயத்தின் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டு, சமூக இடைவெளிகளைப் பின்பற்றி இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago