Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தான் என்ன நிகழ்வுக்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப் பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாருக்கு அமைச்சர் என்னத்தை செய்துள்ளார் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பியதால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
மன்னார் நகர சபையின் 7ஆவது அமர்வு இன்று (19) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது அமர்வின் தலைமை உரை நிகழ்த்திய தவிசாளர்,
மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற ஹஜ் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மன்னார் நகர சபை மற்றும் நகர சபையின் தலைவர் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.
தான் என்ன நிகழ்வுக்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப் பற்றியுமே கதைத்தாரே தவிர, மன்னாருக்கு தான் பல அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்த போதும், அதற்கு முன்னால் நகர சபையின் தலைவர் தடை விதித்திருந்ததாகவும், தற்போதைய நகர சபையின் தலைவரும் அதைத்தான் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் அந்த அமைச்சரிடம் ஒரு விடையத்தை கேட்க விரும்புகின்றேன். ஏற்கெனவே இருந்த நகர சபை தலைவரின் முற்பட்ட காலத்தில் அமைச்சர் இருந்திருக்கின்றார். அந்த அமைச்சர் மன்னார் நகரப்பகுதியிலே தன்னால் செய்து முடித்த வேலைத்திட்டங்கள் என்ன?
அதன் பிற்பாடு நகர சபை ஆட்சி அமைத்த காலத்தின் அவர் செய்த வேளைத்திட்டம் என்ன? கடந்த நகர சபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னர் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நகர சபைக்கு அவர் அந்த காலத்தில் செய்த வேளைத்திட்டங்கள் தான் என்ன?
நாங்கள் தற்போது என்ன அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக இருக்கின்றோம். அமைச்சர் அந்த விடயங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
நாங்கள் நல்ல செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றோம். எதிர்காலத்திலே இன்னும் நல்ல விடையங்களை செய்ய இருக்கின்றோம்.
அந்த விடயங்களை தடுத்து நிறுத்துவதற்காகவ அமைச்சர் குறித்த விடையங்களில் ஈடுபடுகின்றார் என சந்தேப்படுகின்றோம் என்றார்.
இதன் போது பிரேரணையை முன் வைத்து உரையாடிய மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன்,
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்துக்கும், மன்னார் நகர பகுதிக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், அமைச்சர் எதனையும் செய்யவில்லை என கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
இதன் போது நகர சபையின் தலைவருக்கும் குறித்த உறுப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன் போது நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் மற்றும் உறுப்பினர் ஏ.எம்.யு.உவைசுல் கர்னி ஆகியோர் அமைச்சர் செய்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெரிவித்தனர்.
எனினும், சபையில் தொடர்ச்சியாக சல சலப்பு ஏற்பட்டது.
இதன் போது சபையில் எழுந்து கருத்து தெரிவித்த நகர சபை உறுப்பினர் சை.குலதூங்க,
மன்னார் நகர சபைக்கான ஆட்சிக்காலம் 48 மாதங்கள். சுமார் 7 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. மிகுதி மாதங்களில் எத்தனை பேர் இருப்போம் என்று கூட தெரியாது.
சபையின் நடவடிக்கைகளுக்கு எவ்வித இடைஞ்சல்களும் இல்லாமல் மனதில் இருக்கின்ற கால்ப்புனர்ச்சிகளை மறந்து ஒருவரை ஒருவர் குறை கூறுவதை நிறுத்தி விட்டு சபையினை கலங்கப்படுத்தாமல் நல்ல முறையில் கொண்டு செல்வோம்.
எனவே நகரத்தின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகுக்கமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தி பணிகள் தொடர்பில் சபையில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago