Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 30 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நகரத்தை, மிக விரைவில் நவீனமயப்படுத்தி மக்களுக்குக் கையளிப்போமென, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொவித்தார்.
மன்னார் அல் - அஸ்ஹர் பாடசாலையில், இன்று (30) அதிபர் மாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
மன்னார் நகரத்தை அழகுபடுத்த நாம் பல முயற்சிகளை முன்னெடுத்ததாகவும் உள்ளூர் நிர்வாகம் அதற்கு இடையூராக இருந்ததாகவும் தெரிவித்த அவர், தற்போது, அந்த இடையூறுகளைத் தகர்த்து, மன்னார் நகரத்தைச் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதன் ஓர் அங்கமாக, மன்னார் நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருந்ததாகத் குறிப்பிட்ட அவர், விரைவி
அத்துடன், பாடசாலை என்பது வெறுமனே புத்தகக் கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாதெனத் தெரிவித்த அவர், மாணவர்களின் புறக்கீர்த்தியச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் ஓர் ஊடகமாகவும் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அந்தவகையில், மாணவர்களின் ஆற்றல்களையும் திறமைகளையும் இனங்கண்டு, அவர்களை முன்நிலைக்குக் கொண்டுவருவதற்கு, ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதென, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .