எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியின்போது, சிறுவருடையது என சந்தேகப்படும் எலும்புக்கூடு ஒன்று இன்று (14) மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்று வியாழக்கிழமை (14) காலை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று (14) காலை சந்தேகத்துக்கிடமான சிறுவருடைய மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.

தற்போது குறித்த சிறு மனித எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
அதே நிலையில் இன்றைய தினம் குறித்த புதைகுழி தொடர்பான ஆய்வு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தற்போதுவரை ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை.
இன்று மாலைக்குள் அல்லது நாளை முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுவரை குறித்த மனித புதைகுழியில் 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago