Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 05 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி காட்டுப் பகுதியில் மரையை வேட்டையாடிய சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.
மரையை வேட்டையாடி, சுமார் 60 கிலோகிராம் எடையுடைய இறைச்சியை எடுத்துக்கொண்டு வரும் வழியில் இவர்களை, வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (03) கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கியும் இதன்போது மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (04) ஆஜர்படுத்தும் போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
22 minute ago
34 minute ago