Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 21 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
பொறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகளைக் கடத்திச்செல்ல முற்பட்ட வேளை, வன இலாகாவினரால் அக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், இருவர் கைது செய்யப்பட்ட்டதாக வவுனியா வன இலாகாவினர் தெரிவித்தனர்.
வவுனியா, ஓமந்தை, பெரியமடுப் பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர, ஓமந்தை வனவளபாதுகாப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 18 முதிரை மரக்குற்றிகள், மரம் வெட்டும் இயந்திரம், கோடரி என்பன கைப்பற்றப்பட்டிருந்தன. இதனையடுத்து குறித்த இருநபர்களையும் வவுனியா நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்திய போது, அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
48 மற்றும் 27 வயதுடைய புளியங்குளம், பனிக்கநீராவி மற்றும் ஓமந்தை, பெரியமடு பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 27 வயதுடைய நபர் மீது மரக்கடத்தல் தொடர்பில் கனராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முன்னர் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இச் சட்டவிரோத மரம் வெட்டும் நடவடிக்கையை ஓமந்தை, பெரியமடு பகுதி விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஐ.பி ரஞ்சன தலைமையிலான குழுவினரும் மற்றும் ஓமந்தை பகுதி வனவளப் பாதுகாப்புப் பிரிவியைச் சேர்ந்த ரி.வி.சமன்பிரியந்த, எல்.என்.ஏ.நுவன்சமீர, லைஜீரு உதார உள்ளிட்ட குழுவினரே முறியடித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
39 minute ago
3 hours ago
3 hours ago