Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் பெண் ஒருவருக்கு மர்ம உறுப்பை காட்டிய இராணுவ வீரரை, பொதுமக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் தெரிவிக்கையில், குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக வந்து சிறுநீர் கழித்ததுடன், மர்ம உறுப்பை காட்டி தன்னை அழைத்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் தான் இன்னுமொருவருடன் சேர்ந்து குறித்த நபரை நோக்கி சென்ற போது அவர் ஓடியுள்ளார்.
பின்னர் எமது உறவினர்கள் ஒன்று கூடி அவரிடம் விசாரித்த போது தான் இராணுவம் என்று தெரிவித்தார். பின்னர் தாம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் குறித்த நபரை ஓட்டோ ஒன்றில் ஏற்றி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
தான் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றுவதாகவும் வேறு அலுவல்கள் நிமித்தமே அப்பகுதிக்கு சென்றதாகவும் குறித்த நபர் தெரவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
குறித்த சம்பவத்தால் நொச்சிமோட்டை பாலத்துக்கு முன்பாக சற்றுநேரம் பதட்டமான சூழல் ஏற்பட்டதுடன், அங்க ஒன்றுகூடியவர்களால் குறித்த நபர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025