2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மழை நீர் தேங்கி நிற்பது யாருக்கும் தெரியவில்லையா?

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி நகரத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, மழை நீர் மற்றும் வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் இருப்பது என்பன பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நகரத்தில் உள்ள  பல பொது இடங்களில் கழிவு நீரும் மழை நீரும் தேங்கி நிற்பதுடன், அவை டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாகவும் இவ்வாறு நீர் தேங்கி நிற்பது யாருக்கும் தெரியவில்லையா? என இவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், யுத்தம் காரணமாக  பெரும் அழிவினைக் எதிர்கொண்ட கிளிநொச்சி நகரத்தில், யுத்தக் காலத்தின் போல மண் அரண்கள் பல அமைக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறித்த மண் அரண்கள் இயந்திரங்களுடன் துணையுடன் அழிக்கப்பட்டபோது, நீர் வழிந்தோடுவதற்கான வழிகளை அவை மறைத்து விட்டன.

அத்துடன் ரயில் வீதி, ஏ-9 சாலை ஆகியவற்றின் புனரமைப்புகளின் போது, கிளிநொச்சி நகரத்தின் வெள்ளம் பாய்ந்து செல்வதற்கான வழிகளை கருத்திற்கொள்ளாததன் காரணமாக, மழை நீர் தேங்கி நிற்கின்றது.

கரைச்சியின் பொன்நகர் தொடக்கம் பரந்தன் வரையும் மழை நீர், பொது இடங்களிலும் வீடுகளிலும் தேங்கி நிற்கின்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயம் ஆராயப்பட்ட போதிலும், வெள்ளம் மற்றும் கழிவுநீர் வழிந்தோடுவதற்கான வாய்க்கால்கள் அமைக்கப்படாததன் காரணமாக, கிளிநொச்சி நகரத்தின் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது என, சுகாதாரத் தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .