Niroshini / 2021 ஜூலை 27 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்துக்குள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் தவிர, தேவை நிமிர்த்தம் வருபவர்களது வாகனங்கள் உட்செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்துக்கு தங்கள் தேவைகள் நிமித்தம் வரும் பொதுமக்கள் வாகனங்களை பாதுகாப்பாக மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் நிறுத்திவிட்டு செல்வது வழமை. அண்மைய நாள்களாக வாகனங்கள் மாவட்ட செயலகத்தின் வளாகத்துக்குள் உட்செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த் விடயம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வாகனத் தரிப்பிடம் எதுவும் இல்லாத நிலையில், மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு சிரமப்படுகின்றனர்.
மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பாரிய இடவசதியுடன், மர நிழலும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மக்கள் தங்கள் கருமங்களை ஆற்றக்கூடியதாக இருந்தது. தற்போது ஏ9 வீதியோரங்களில் அதிக வாகனங்களை நிறுத்துவதனால் விபத்துகள் ஏற்படகூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது
இதனை கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago