Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்துக்கான சகலவிதமான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி மற்றும் பெரிய பண்டிவிருச்சான் ஆகிய இரண்டு துயிலும் இல்லங்களிலும், மாவீரர் தினம் அனுஷ்டிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
“வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் ஏற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்றும் இல்லாதது போல் மன்னார் மாவட்டத்தில் தான் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அரசியல்வாதிகளின் பின்புலத்தோடு இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு, அரசாங்கமும், அரசாங்கத்தின் புலனாய்வாளர்களும் எந்த விதமானத் தடைகளையும் விதிப்பதாக இல்லை.
மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகள் ஒன்றினைந்து மாவட்டத்தில் எந்தவித அரசியல் கலப்பும் இன்றி தூய நோக்குடன் முன்னெடுக்கின்ற மன்னார் மாவட்டத்தின் முயற்சிக்கு, பல்வேறு விதமானத் தடைகளை விதிப்பதுடன், புலனாய்வாளர்கள் எங்களுடைய நிர்வாகத்துக்கு அலைபேசியுடாகவும் நேரடியாகவும் அச்சுறுத்துகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அரசு ஆட்சி மாற்றத்தின் பின்னர், கொள்கை ரீதியான அடிப்படையில் இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளித்துள்ள இவ்வாறான சூழ்நிலையில், மன்னாரில் மட்டும் அரசியல்வாதிகள் அல்லாத ஒரு நிகழ்வை குழப்ப வேண்டும் என்கின்ற போக்கு ஏன் காணப்படுகின்றது?
ஏனைய துயிலும் இல்லங்களில் அரசாலும் அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் துயிலும் இல்லங்களின் கட்டுமானப்பனிகள் நடைபெறுகின்ற போது, இங்கு சாதாரண முறையில் உள்ளூர் வாசிகளின் ஏற்பாட்டுடன் நடை பெறுகின்ற நிகழ்வுகளுக்கு, அரசாங்கம் தடை விதிக்க முற்படுவதும், புலனாய்வாளர்களை கொண்டு மிரட்டுவதும் என்றால் அரசின் ஒத்தோடிகளுக்கு ஒரு ஞாயம், அரசு சாரமல் இருக்கின்ற சிவில் அமைப்புகளுக்கு இன்னும் ஒரு ஞாயமா? என்கின்ற கேள்வி எழுகின்றது.
எனவே, அரசாங்கம் தங்களுடன் சேர்ந்து இருப்பவர்களை மட்டும்தான் இவ்வாறான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கப்போகின்றதா? என்கின்ற நிலைப்பாடு இருக்கின்றது. ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. நிகழ்வு திட்டமிட்டபடி திட்டமிட்ட நேரத்துக்கு இடம்பெறும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago