Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“மாவீரர் தினத்தை தாயகத்தில் அனுஷ்டிக்க சர்வதேச அழுத்தங்களே காரணம்” என, வடமாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல பணிக் குழுத்தலைவருமான பசுபத்திப்பிள்ளை தெரிவித்தார்.
திருநகர் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் நேற்று (26) வட்டார பணிக்குழு செயலாளர் வேலமாலிதன் தலைமயில் நடைபெற்ற திருநகர், கணேசபுரம் ஜெந்திநகர் வட்டாரத்தில் உள்ள மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“மாவீரர் தின நிகழ்வு மற்றும் மாவீரர் பெற்றோர் கௌரவிக்கும் நிகழ்வு சாதாரணமாக நிகழ்ந்தவை அல்ல. நடந்த இனப்படுகொலை மற்றும் இசைப்பிரியா போன்ற இன்னும் பல போராளிகள் சின்னாபின்னமாக சிதறடிக்கப்பட்ட நிலைமைகள் உலகுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில், சர்வதேச நிலைமாறு நீதிப் பொறிமுறை ஜெனிவாவில் கொண்டுவரப்பட்டதனால், அரசாங்கம் ஒரு தளர்வை ஏற்ப்படுத்தி உள்ளது.
“ஆனாலும், அச்சுறுத்தல்கள், கண்காணிப்புக்கள் தொடர்கின்றன. இருப்பினும், கொள்கையில் மாற்றம் இல்லாமல் பயணிக்கின்றோம். இறை நீதியின் அடிப்படையிலும் இயற்கை நீதியின் அடிப்படையிலும் சத்தியமான போராட்டங்கள் தோற்பதில்லை. அக்காலம் மீண்டு வரும்போது மகிழ்ச்சி அடையாவிடினும், ஆறுதல் அடைய முடியும்” எனத் தெரிவித்தார்.
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago