2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மீண்டும் வெடித்துச் சிதறும் அடுப்பு

Freelancer   / 2022 மார்ச் 06 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் மஞ்சள் எரிவாயுவை (laugfs gas) பயன்படுத்தியவர்களின் எரிவாயு அடுப்பு ஒன்று நேற்று இரவு வெடித்துள்ளது.

குறித்த எரிவாயு சிலிண்டர் எடுத்து பத்து நாட்கள் ஆகிய நிலையில், நேற்று அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

அடுப்பு வெடித்துள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் வந்து சம்பவத்தை பார்வையிட்டுள்ளனர்.

எரிவாயு வாங்கிய கடைக்கு தெரியப்படுத்தி சம்மந்தப்பட்ட முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்து அவர்களும் வந்து பார்வையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X