2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மீன் பிடிக்கச் சென்ற மீனவரைக் காணவில்லை

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தலைமன்னார் பியரிலிருந்து படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தரான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளமையால் தலைமன்னார் கடற்படையினர் உட்பட அப்பகுதி மீனவ சமூகம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

நேற்று மாலை ஆறு மணியளவில் தலைமன்னார் பியரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இராமசாமி சிறிகாந் (வயது -30)   என்பவர் வழமை போன்று இணைப்பு இயந்திர படகு ஒன்றில் தனியாக மீன் பிடிக்காகச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதிக்கு மீன் பிடிக்ககச் சென்றவர்கள் கடலில் படகு ஒன்று வலைகள் கடலில் இடப்பட்ட நிலையில் இருப்பதை அவதானித்ததையடுத்தே படகில் மீன் பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை என்ற சம்பவம் தெரியவந்துள்ளது.

இது விடயமாக தலைமன்னார் பொலிஸார் மற்றும் தலைமன்னார் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் தலைமன்னார் கடற்படையினரும் அப்பகுதி மீனவ சமூகமும் காணாமல்போன மீனவரைத் தேடி வருகின்றனர்.

மீனவர், தலைமன்னார் பியர் கடற்கரையிலிருந்து தலைமன்னார் மேற்கு கடலை நோக்கி சுமார் பத்து கடல் மைல் தூரத்திலேயே மீன் பிடிக்கும்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X