2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லை நீதிமன்றத்தில் ஞானசார தேரர்

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார் ஆலயத்தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட  அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றுள்ளனர். 

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ,மணிவண்ணன் ,சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் 15 நிமிடங்கள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X