Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக, முல்லைத்தீவில் இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், வவுனியாவில் இருந்து பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காததன் காரணமாகவே, வவுனியாவில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கென, ஏனைய மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பொதுமக்கள் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள மக்களை, காலை 9 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்வதாக, ஏற்கெனவே அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள், நேற்றுக் காலை வவுனியா பழைய பஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த போது, அங்கு போக்குவரத்து வசதி ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை.
இதைத்தொடர்ந்து, வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தியபோது, பஸ் வசதிகள் செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிலர் மாற்று வழிகளில் சென்றபோதும், அதிகளவானோர் பஸ் எற்பாடுகள் இன்றி திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago