2025 ஜூலை 10, வியாழக்கிழமை

முல்லைக்கு ஐ.நா பிரதிநிதி விஜயம்

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவுக்கு,இன்று (12) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால், இவ்வாண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்ட, பங்குத்தந்தை ஒருவரால், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக அமைக்கப்பட்ட பொது நினைவிடத்தையும் தனது விஜயத்தின்போது பார்வையிட்ட பப்லோ டி கிறிப், இடைநிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 387 ஏக்கர் காணி உள்ளடங்கலான 617 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவேண்டும் என பொதுமக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இறுதிப் போர் இடம்பெற்ற பகுதிகளான, முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று பப்லோ டி கிறிப் பார்வையிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .