2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முல்லையில் முன்னணியின் தேசிய மாநாடு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இவ்வாண்டுக்கான தேசிய மாநாடு,  கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது

முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டவாளர் க. சுகாஸ், காண்டீபன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்டஅமைப்பாளர்கள், கட்சியின் தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நிகழ்வின் முன்னதாக கட்சிக்கொடி கஜேந்திரகுமாரால் ஏற்றிவைக்கப்பட்டு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணகத்தை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது இவ்வாண்டுக்கான கட்சியின் கொள்கைப் பிரடகடனம் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X