Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 மே 13 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மட்டுப்படுத்தப்பட்ட அளவில், சுகாதார நடைமுறைகளுடன இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்hர்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வை, கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, தடுக்கும் முகமாக, அரசாங்கத்தால் பல்வேறு நடவடி க்கைகள் முன்னெடுக்க்பபட்டு வருகின்றன எனக் குற்றஞ்சாட்டினார்.
தமிழ் மக்களை முற்று முழுதாக அடக்கி, இலங்கையில் தமிழர்கள் என்ற ஓர் இனம் இருந்ததாக, ஒரு பதிவுகள் கூடஇருக்கக் கூடாது என்ற வகையில், நீண்ட கால திட்டத்தில், இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.
'புதன்கிழமை (12) இரவு, மத குருக்கள் சிலர், நினைவு கல் ஒன்றை அப்பகுதிக்கு கொண்டு சென்றபோது, அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, வந்தவர்களும் அச்சுறுத்தப்பட்டனர்.
'அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொள்ளும் பகுதியில் உள்ள தீபம் ஏற்றும் கல்லையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்' எனவும், சார்ள்ஸ் எம்.பி கூறினார்.
கொரோனா தொற்று காரணமாக, உடனடியாக குறித்த வியைங்களை சர்வதேச ரீதியில், சர்வதேச நாடுகளிடம் முறையிடக் கூடிய சூழ்நிலைகள் இல்லை எனத் தெரிவித்த அவர், எனினும், அவர்களுக்கு தாங்கள் தெரியப்படுத்துவோமெனவும் கூறினார்.
மேலும், இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில், சுகாதார நடைமுறைகளுடன் முன்னெடுப்பாமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
4 hours ago