2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முஸ்லிம் வெளியேற்றத்தின் நினைவு தினம்

Editorial   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முஸ்லிம்கள், அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாளின் 27ஆவது வருட நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், அடையாள கவனயீர்ப்புப் கோராட்டம் ஒன்று, யாழ்ப்பாண, கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தால், யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அப்பகுதியில் கடும் மழைக்கு மத்தியிலும் ஒன்று கூடிய யாழ் முஸ்லிம் மக்கள், ஒக்டோபர் 30ஆம் திகதியை யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும், சொந்தமண்ணில் இன்றுடன் 27 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசாங்க மட்டத்தில், அவர்களின் அபிலாஷைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், நிகழ்வில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .