Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 17 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒதியமலை கிராமத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது குறித்த பண்ணையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலி மின் இணைப்பு ஊடாக அதிகளவான மின்சாரம் பாய்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விவசாய பண்ணையின் உரிமையாளரான பெண் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது மின்சாரவேலிக்கான மின்இணைப்பு இயந்திரங்களும் நீதிமன்றில் சான்று பொருட்களாக முற்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் கைது செய்யப்பட்ட பண்ணை உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 13ஆம் திகதி வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.
மேலும், யானை உயிரிழப்பு தொடர்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியரின் பிரோத பரிசோதனையும் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
50 minute ago
1 hours ago