2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ்மாவட்டதில் 1,000 குளங்களைப் புனரமைக்க நடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ் மாவட்டத்திலுள்ள ஆயிரம் குளங்களைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அதற்காக இந்திய துணைத்தூதரகத்துடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளதோடு, அவர்களின் பங்களிப்புடன் 1,000 குளங்களை அடுத்து வரும் 2 வருடங்களில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக,  பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள முழு உற்பத்தியில், 24 சதவீதம் விவசாய உற்பத்தியில் தங்கியுள்ளது. அதை விட வடக்கு கிழக்கில் உள்ள 40 சதவீதம் மக்கள் விவசாயத்தில் தங்கியுள்ளது. இது தொடர்பில் இவ்வளவு காலமும் இருந்த இடைவெளியினை நிரப்புவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்தார் பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன். உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள கமநலசேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற கமக்கார அமைப்புக்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

அத்துடன் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் விவசாயிகளின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், முதல் கட்டமாக எதிர்வரும் மாதத்தில் இருந்து வடக்கு கிழக்கில் பசுமை புரட்சி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X